தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு
- கடலை மாவு
- அரிசி மாவு
- மிளகாய் தூள்
- பெருங்காயத்தூள்
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- சோம்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில், 100 கிராம் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கிவிட்டு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், நான்கு ஸ்பூன் கடலை மாவு, நான்கு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு காய்ந்த மிளகாய், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
பின், தயார் செய்து வைத்துள்ள மாவை எண்ணெயில் சிறிதாக பொடித்து விட்டு போட்டு பொரிக்கவும்.
Download உருளைக்கிழங்கு பக்கோடா

No Comments
Comment on